பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.27 அடியாக சரிவு

Today erode news in tamil- போதிய மழைப்பொழிவு இல்லாததால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.27 அடியாக சரிவடைந்துள்ளது.

Update: 2023-09-08 09:27 GMT

Today erode news in tamil- பவானிசாகர் அணை (கோப்பு படம்)

Today erode news in tamil-கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக வரும் பவானி ஆற்றுடன் நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மோயாறு கலக்கும் இடத்தில் கீழ் பவானி திட்டம் மூலம் அணை கட்டப்பட்டுள்ளது. இதனால் உண்டான நீர்தேக்கத்திற்கு பவானி சாகர் நீர்தேக்கம் என்று பெயர்.

நாடு விடுதலை அடைந்தபிறகு உருவான இத்திட்டம், கடந்த 1956 -ல் நிறைவடைந்தது. இந்த அணை பவானிசாகர் அணை என்றே அழைக்கப்படுகிறது. இவ்வணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் என்ற கிராமத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது ஒரு மண் அணையாகும்.

இதன் உயரம் 105 அடி, இதன் கொள்ளளவு 33 கோடி கன அடியாகும். இதன் நீர்ப்பிடிப்பு பகுதி 1621.5 சதுர மைல் ஆகும். நீர்தேக்கத்தின் பரப்பளவு 30 சதுர மைல்களாகும். அணை உள்ள இடத்தில் உள்ள நகர் அணையின் பெயராலயே பவானிசாகர் என அழைக்கப்படுகிறது, இது ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வணையிலிருந்து செல்லும் கீழ் பவானி திட்ட கால்வாய் ஈரோடு மாவட்டத்தை வளப்படுத்துகிறது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக, பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அதே நேரம் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77.27 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கன அடியும், காளிங்கராயன் பாசனத்திற்கு 500 கன  அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.89 கன அடியும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 15.05 கன அடியும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.33 கனஅடியாக உள்ளது.

Tags:    

Similar News