தாளவாடி அருகே கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்டு யானைகள்!

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே, கூட்டம் கூட்டமாக யானைகள் சாலையை கடந்து செல்வதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-06-08 11:27 GMT

தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில்,  கூட்டம் கூட்டமாக குட்டிகளோடு  செல்லும் யானைகள்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், மான்கள் காட்டுயானைகள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் வனவிலங்குகள் அவ்வப்போது காடுகளை விட்டு வெளியேறி சாலைகள் சுற்றிதிரிவது வழக்கம்.

இந்நிலையில், தாளவாடியில் இருந்து தலமலை வழியாக திம்பம் செல்லும் சாலையில் காட்டு யானைகள் தனது குட்டிகளோடு கூட்டம் கூட்டமாக சாலையை கடந்து சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். யானைகள் முழுமையாக கடந்து செல்லும் வரை, பீதியில் இருந்தனர். 

இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு காட்டுயானைகள் வெளியேறும். மேலும் சாலையோரம் நின்று தீவனங்களை உட்கொண்டு விட்டு சாலையை கடந்து செல்வது வழக்கம். 

இந்த காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் இருக்கும்போது ஆக்ரோஷத்தோடு மனிதர்களை தாக்க வாய்ப்புள்ளது. எனவே சாலையில் பயணிக்கும்  வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள், செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். என்று கூறினர்.

Tags:    

Similar News