உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 4,78,690 ரூபாய் பறிமுதல்
சத்தியமங்கலம் அருகே இருவேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 4,78,690 ரூபாய் பறிமுதல்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி அரேப்பாளையம் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1,75,730 ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த வெங்காய வியாபாரி சந்திரன் என்பதும், சாம்ராஜ் நகரில் இருந்து கோவை சென்று வெங்காயம் விற்பனை செய்த பணம் என்றும் தெரிய வந்தது.
அதே போல் தாளவாடியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர் ராமசாமி எந்த ஆவணம் இன்றி தனியார் பேருந்தில் கொண்டு வந்த 3,02,960 ரூபாயை கொண்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து மொத்த பணமும் கைப்பற்றப்பட்டது. இரு வேறு நபர்களிடம் இருந்து மொத்தம் 4,78,690 ரூபாய் தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட தொகையை சத்தியமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.