சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை

சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1 மணி நேரம் பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி.;

Update: 2021-04-05 12:45 GMT

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து வெப்ப காற்றுடன் கடுமையான வெயில் வாட்டி வருகின்றது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 106 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவானது.

இந்நிலையல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி வந்த நிலையில், இன்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய துவங்கியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உருவானது. கடந்த சில நாட்களாகவே வெப்பம் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News