திம்பம் மலைப்பாதைகளில் தோன்றியுள்ள புதிய அருவிகள்
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் பெய்த கன மழையின் காரணமாக மலைப்பாதைகளில் தோன்றியுள்ள புதிய அருவிகள்.
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பகுதி கடல்மட்டத்திலிருந்து 1140 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் காரணமாக திம்பம் மலைப்பகுதியை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் கொடைக்கானல், ஊட்டி போல குளிர்ந்த சீதோஷன நிலை காணப்படுகிறது. திம்பம் சுற்றியுள்ள மலை பகுதிகளில் கடந்த சிலநாட்களாக கனமழையின் பெய்தது. இதன் காரணமாக காய்ந்து கிடந்த வனப்பகுதி பச்சைப்பசேலென பச்சை கம்பளம் விரித்தது போல் அழகாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் இன்றும் திம்பம் சுற்றவட்டாரப்பகுதி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே கொண்டை ஊசி வளைகளில் புதிய அருவிகள் போல் தோன்றி மழை நீர் கொட்டியது. இந்த புதிய அருவிகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு ரசிப்பதோடு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.