தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழப்பு

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்த்துறையினர் விசாரணை.;

Update: 2021-08-23 12:45 GMT

 ஜீரகள்ளி வனப்பகுதியின் அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த மக்னா யானை.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி கடம்பூர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம், ஜுர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு அடிக்கடி வெளியேறுவதும், விளை நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வதும் தொடர் கதையாக உள்ளது. இதனால், ஜுரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஓசூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜேம்ஸ் (65) தனது நிலத்தின் உருளைக் கிழங்கு பயிர்களை காப்பாற்ற மின்வேலி அமைத்துள்ளார். மேலும் இந்த மின்வேலியில் இரவு நேரத்தில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு ஜீரகள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, விவசாயி ஜேம்ஸ் விளை நிலத்தின் உள்ளே புகுந்த பொழுது மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது. இதுகுறித்து ஜுர்கள்ளி வனச்சரகர் ராமலிங்கத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே விவாசாயி ஜேம்ஸ் தலைமறைவானார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறையினர் இறந்த யானையை ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது இறந்த யானை 30 வயதுமிக்க மக்னா யானை என்றும் உணவு தேடி வந்த போது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்த வேலியில் சிக்கியதால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து தலைமறைவான விவசாயி ஜேம்ஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News