கொரானா தொற்றால் எல்.ஐ.சி ஏஜென்ட் உயிரிழப்பு
கொரோனா நோய்த்தொற்று காரணமாக சத்தியமங்கலத்தை சேரந்த எல்.ஐ.சி ஏஜென்ட் ஒருவர் உயிரிழந்தார்.;
தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோணமூலை அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து அண்ணாநகர் பகுதி தனிமைபடுத்தப்பட்டு கோணமூலை ஊராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு நபர்களில் எல்.ஐ.சி ஏஜென்ட் சுந்தரம் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.