வயதான தம்பதியினர் தற்கொலை
சத்தியமங்கலத்தில் வயதான தம்பதியினர் 2 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொணட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பால விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 72). இவரது மனைவி ரத்னா (வயது 70). இவர்களின் மூன்று பெண் குழந்தைகளும் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். கிருஷ்ணராஜ் மற்றும் ரத்னா தம்பதியினர் வயது முதிர்வு காரணமாக தங்களுக்கு ஆதரவு யாரும் இல்லை என மன வருத்தம் ஏற்பட்டு மதுவில் விஷம் கலந்து அதை அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து அக்கம் பக்கத்தினர் சத்தியமங்கலம் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.