பவானிசாகர் மலைகிராம மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எஸ்பி

பவானிசாகர் அருகே மலைகிராம மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகளை எஸ்பி சசிமோகன் வழங்கினார்.

Update: 2021-07-10 12:15 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகேயுள்ள நந்திபுரம் கிராமத்தில்,  மாவட்ட காவல்துறை, ஈ.கே.எம். அப்துல்கனி மதரஸா பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமை தாங்கி,  கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசினார். பின்னர் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நந்திபுரம் கிராமத்தை சேர்ந்த 23 இருளர் குடும்பத்தினருக்கு தலா 1 சிப்பம் அரிசி,மளிகை பொருட்கள் தொகுப்புகள், வேட்டி, சேலை, சுடிதார், டிபன் பாக்ஸ், பாய், தலையனை, பெட்சீட் மற்றும் பிஸ்கட்டுகள் ஆகியவற்றை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், சத்தி காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பையா, பவானிசாகர் காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன், பவானிசாகர் வனசரகர்சிவக்குமார், மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு, மவோயிஸ்ட் நூண்ணறிவு பிரிவு, காவல் ஆளினர்கள், ஈ.கே.எம். அப்துல்கனி மதரஸா பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஈரோடு மேக்ஸிமா பேட்டரி மற்றும் ஆர்.ஓ.சர்வீஸ் நிறுவனத்தினர் உள்ளிட்ட ஏரளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News