கீழ்பவானி வாய்க்காலில் கிருஷ்ணன் சிலை கண்டெடுப்பு
பவானிசாகர் எரங்காட்டூர் பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் எரங்காட்டூர் பகுதி வழியாக செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், கிருஷ்ணர் சிலை ஒன்று கிடப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன், அந்த சிலையை மீட்டு, சத்தியமங்கலம் வட்டாட்சியர் ரவி சங்கரிடம் ஒப்படைத்தார். சிலையை ஆய்வு செய்த வட்டாட்சியர், கிருஷ்ணர் சிலையின் அளவு மற்றும் வெள்ளி உலோகமா? என்பது குறித்து விசாரிக்க, ஊராட்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனியார் நகைக்கடை ஒன்றில் சிலையின் அளவை பார்த்தபோது, சுமார் 4.600 கிராம் எடை இருந்தது. அந்த சிலை வெள்ளியால் ஆனதல்ல, அலுமினியம், ஈயம் போன்ற உலோகங்களை கொண்டு உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. கீழ்பவானி வாய்க்காலில் வெள்ளி உலோகம் போன்ற சிலை கண்டெடுக்கப்பட்டது, அப்பகுதி மக்களிடையே சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.