தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் கன்று பலி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை தாக்கியதில் கன்று பலியானது.;

Update: 2021-09-03 09:30 GMT

பலியான கன்றுக்குட்டி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரத்திற்குட்பட்ட தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தனர். ஆனால் சிறுத்தை கூண்டில் சிக்காமல் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி (45). இவர் ஏழு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல் மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது தனது பசுமாட்டின் கன்று உடல் முழுதும் காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தது. உடனடியாக சம்பவம் குறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அப்பகுதிக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்ததில் சிறுத்தை தாக்கி கன்று இறந்ததை உறுதி செய்தனர்.  

Tags:    

Similar News