கடம்பூர் அருகே கஞ்சா வியாபாரி கைது
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 2.5 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடம்பூர் போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து கடம்பூர் போலீசார் மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாக்கம்பாளையத்திலிருந்து குன்றி செல்லும் சாலையில் மாகாளியம்மன் கோவில் அருகே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து சோதனை செய்ததில் 2.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. உடனடியாக அவர்களிடம் இருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரனை மேற்கொண்டனர்.
அப்போது அவர் குமார்(31) என்றும் குன்றி பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். கஞ்சாவை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் மறைத்து எடுத்து வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த கடம்பூர் போலீசார் நீதிமன்றதில் ஆஜர்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பினர்.