வாழைக்காய் வியாபாரியிடம் பணம் பறிமுதல்

பண்ணாரி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், வாழைக்காய் வியாபாரியிடமிருந்து 4லட்சத்து 66ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-14 13:05 GMT

பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, சத்தியமங்கலம் அருகே பண்ணாரி ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக எகிடே என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்தயமங்கலம் அருகே சாம்ராஜ் நகரை சேர்ந்தவர் என்பதும் வாழைக்காய் வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இவர் வாழைக்காய் விற்பனை செய்ததில் வந்த 4 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு தனது ஜெ.சி.பி வாகனத்திற்கு ஸ்பேர்ஸ் வாங்க சேலம் சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்த பணத்தை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News