ஈராேடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாம்ராஜ்நகரில் இருந்து கருங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியே வந்து கொண்டிருந்தது. அப்போது திம்பம் மலைப்பாதை 13 வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்ப முடியாமல் பழுதடைந்து நின்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் கிரேன் வாகனம் மூலம் லாரியை அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி கருங்கல் பாரம் தாங்காமல் திடீரென கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் மீண்டும் கிரேன் வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.