பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்வரத்து அதிகரித்தன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள, பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து 500 கன அடியாக இருந்தன. இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6333 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.87 அடியாகவும் நீர் இருப்பு 25.6 டிஎம்சி ஆகவும் நீர்வரத்து வினாடிக்கு 6333 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 500 கனஅடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.