வடமாநில இளைஞர் கல்லால் அடித்து கொலை

Update: 2021-02-21 06:45 GMT

சத்தியமங்கலம் அருகே வடமாநில இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல்நிலையம் பின்புறம் பவானி ஆற்றங்கரையோரத்தில் வரசித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இன்று காலை வழக்கம் போல் கோவிலில் பூஜை செய்வதற்காக கோவில் பூசாரி வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் முன்புறம் வடமாநில இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்தவர் சுமார் 21 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் என்பதும் இளைஞரின் தலையில் கல்லால் பலமாகத் தாக்கப்பட்டு இறந்ததும் தெரிய வந்துள்ளது. பிரேதத்தை கைப்பற்றிய சத்தியமங்கலம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த நபர் யார் ? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News