பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Update: 2021-01-28 07:30 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இரண்டாம் சுற்று தண்ணீர் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. கடந்த மாதம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று தண்ணீர் 7ம் தேதி திறக்கப்பட்டு 20ஆம் தேதி நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இரண்டாம் சுற்றில் இன்று முதல் 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 15 நாட்களுக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் படிப்படியாக உயர்த்தி 2300 கனஅடி நீர் திறக்கப்படும் எனவும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற வேண்டும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News