ஈரோடு மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து

ஈரோடு மாவட்டத்தில், இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-10 05:00 GMT

ஈரோட்டில் மாவட்டத்தில், சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி, கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகள் என தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளில் சுமார் 110 தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் கையிருப்புக்கு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது போதிய தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை தடுப்பூசி வருகையை பொறுத்து வழக்கம்போல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News