சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக போக்குவரத்துக்கு தடை தொடரும்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும்: ஐகோர்ட் திட்டவட்டம்;
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்திற்கு தடை தொடரும் என்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வாகன போக்குவரத்து தடையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் தொடர்ந்த மனுவின் மீது இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தடையை நீக்க மறுத்ததுடன், ஈரோடு கலெக்டர் உத்தரவை திரும்ப பெற அனுமதிக்க முடியாது. சரணாலயத்தில் உள்ள கிராமங்களை மாற்ற வேண்டும் அல்லது சரணலாயங்களை மாற்ற வேண்டும் என தெரிவித்தது.
போக்குவரத்து தடையால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.