பவானியில் மனைவி, மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை

பவானியில், மனைவி, மகன் இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-23 05:00 GMT

பவானி,  பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் சங்கமேஸ்வரன் (56).  வெள்ளி கொலுசு செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (52) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு,  உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். இளைய மகன் சந்தோஷ் (25), கடந்த 8 மாதத்திற்கு முன்பு,  வாகன விபத்தில் இறந்து விட்டார். மூத்த மகன் கௌதம் (28) கோவையில் வேலை பார்த்து வருகிறார். மனைவி, மகன் இருவரும் உயிரிழந்ததால் சங்கமேஸ்வரன் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால்,  அளவுக்கதிகமாக மது அருந்தியதால் குடிபோதையில்  நேற்று தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தினை சாப்பிட்டு பழைய பேருந்து நிலையம் மயங்கிக் கிடந்துள்ளார். இதைக்கண்ட அப்பகுதியினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனை கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து,  பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News