பராமரிப்பு பணி காரணமாக பவானியில் இன்று மின் நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக பவானியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;
பராமரிப்பு பணி காரணமாக, பவானியில் இன்று, (நவ. 6ல்) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, கோபி மின்பகிர்மான வட்டம், பவானி கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:
பவானி அருகே ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நவ. 6ல் நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் காலை 09:00 மணி முதல், மாலை 05:00 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பவானி நகர் முழுதும், மூன்ரோடு, ஊராட்சிக்கோட்டை, ஜீவா நகர், செங்காடு, ஆண்டிக்குளம், என்.ஜி.ஜி.ஒ. காலனி, கூடுதுறை, காளிங்கராயன்பாளையம், எலவமலை, லட்சுமி நகர், மூலப்பாளையம், மேட்டுப்பாளையம், சன்னியாசிப்பட்டி, வரதநல்லூர், சங்கரகவுண்டம்பாளையம், மொண்டிபாளையம், மைலம்பாடி, கொட்டக்காட்டுபுதூர், சக்திநகர், செலம்பகவுண்டம்பாளையம், மோளக்கவுண்டம்புதூர், தொட்டிபாளையம், வாய்க்கால்பாளையம், கொம்புக்காடு, கண்ணாடிபாளையம், ஆண்டிக்குளம், சக்தி நகர்,குருப்பநாயக்கன்பாளையம், ராணா நகர், நடராஜா புரம், வர்ணபுரம், அந்தியூர் பிரிவு, பழனிபுரம், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.