JKKN கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்
jkkn educational institutions, pongal festival celebration குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நிர்வாகிகள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பாரம்பரிய உடையில் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.;
jkkn educational institutions, pongal festival celebration
குமாரபாளையம் JKKN கல்விநிறுவனங்களில் நடந்த பொங்கல்விழா போட்டிகளில் இரண்டாம் பரிசினை பார்மசி கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்குழுமத்தலைவர் என்.செந்தாமரை,நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் வழங்கினர்.
jkkn educational institutions, pongal festival celebration
குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் பொங்கல் விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் அனைவரும் இப்பண்டிகையினை தொடர்ந்து 4 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவர். அந்த வகையில் எல்லோருடைய இல்லத்திலும் கரும்பு இருபுறமும் வைத்து நடுவில் பொங்கல் பானையிட்டு சூர்யபகவானை வணங்கி பொங்கலிடுவர். அந்த பொங்கலானது பொங்கும்போது குலவிச்சத்தத்தினை எழுப்பி பெண்கள் ஆரவாரத்தோடு உற்சாகமாக வரவேற்று மகிழ்வர். உற்றார்,உறவினர்கள் , குடும்பத்தார் என அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கலை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கமான நிகழ்வாகும்.
jkkn educational institutions, pongal festival celebration
குமாரபாளையம் JKKN கல்விநிறுவனங்களில் நடந்த பொங்கல்விழா போட்டிகளில் மூன்றாம் பரிசினை கலைஅறிவியல் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்குழுமத்தலைவர் என். செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா ஆகியோர் வழங்கினர்.
jkkn educational institutions, pongal festival celebration
தமிழகத்தில் உள்ள கல்விநிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகளிலும் பொங்கலை வரவேற்கும் விதமாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆண்டுதோறும் பாரம்பரிய உடையில் பொங்கலிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளோடு கொண்டாடுவர்.
அந்த வகையில் குமாரபாளையம் JKKN கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் பொங்கல்விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் அனைத்து கல்விநிறுவனங்களின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. தமிழரின் பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பு, மண்பானை வைத்து, வாழை மரம், தென்னங்கீற்று தோரணம் கட்டி தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை யினை மாணவர்கள் அணிந்து, மாணவிகள் புடவை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
jkkn educational institutions, pongal festival celebration
குமாரபாளையம்JKKNகல்விநிறுவனங்களில்நடந்தபொங்கல்விழாநிகழ்ச்சியில்கோலப்போட்டிநடந்தது. இதில் ஏராளமான மாணவிகள், பெண்கள் கலந்துகொண்டனர்.
jkkn educational institutions, pongal festival celebration
கல்வி நிறுவன கல்லூரிகளின் சார்பில் தனித்தனியே பொங்கலிட்டு பொங்கல் பானையை வைத்தும் மாணவிகள் கும்மி அடித்தும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் உறியடித்தல், சிலம்பம், பாட்டுப்போட்டி, நடனப்போட்டி,கோலப் போட்டிகள் நடைபெற்றன.இப்போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பொங்கல்விழாவை பறைசாற்றும் விதமான பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இப்பொங்கல்விழா நிகழ்ச்சியில் , JKKN பல்மருத்துவக்கல்லூரியானது முதல் பரிசையும், JKKNபார்மசி கல்லூரி இரண்டாவது பரிசையும் , JKKநடராஜா கலைஅறிவியல் கல்லூரி மூன்றாம் பரிசையும் பெற்றன .
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் என்.செந்தாமரை, நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா, ஆகியோர் வழங்கினார்