பஞ்சு குடோனில் தீ விபத்து

3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்;

Update: 2021-04-12 14:46 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள சித்தோடு வசந்தம் பாரடைஸ் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர் பச்சைப்பால் வாய்க்கால் சாலையில் ஏ.வி.எஸ் என்டர்பிரைசஸ் என்ற பெயரில் பஞ்சு குடோன் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை பலத்த காற்றுடன் இடி, மின்னல் வீசியதில் இவரது பஞ்சி குடோனில் இருந்த பஞ்சு திடீரென தீ பற்றி எறியத் தொடங்கியது.


இதையடுத்து தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எறிய தொடங்கியது. இதனையடுத்து அங்கு வேலை பார்ப்பவர்கள் பவானி மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனிலிருந்த பஞ்சு மூட்டைகள், இயந்திரங்கள் அனைத்தும் தீக்கு இரையாகின.

இச்சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் பஞ்சு மற்றும் எந்திரங்களி்ன் மதிப்பு சுமார் மூன்று கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தெரிய வந்ததுள்ளது. திடீரென நிகழ்ந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பு சம்பவங்களும் நிகழவில்லை.

Tags:    

Similar News