தேர்தல் பணி முடித்து திரும்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணி முடித்து விட்டு திருப்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்;
தேர்தல் பணி முடித்து விட்டு திருப்பிய சிறப்பு உதவி ஆய்வாளர் சாலை விபத்து பரிதாபமாக உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்எஸ் கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி. இவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று நடைபெற்ற தேர்தல் பணிகளை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது காஞ்சி கோவில் அருகே உள்ள சின்னியம்பாளையம் என்ற இடத்தில் எதிர்பாரவிதமாக நிலைதடுமாறி கீழே வீழந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் பரிதாபதாக உயிரிழப்பு.இதனையடுத்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிகோவில் போலீசார் உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடபர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.