ஈரோடு: கிராமப்புற பெண்களுக்கு நாப்கின் வழங்கிய வஜ்ரம் சிலம்பாட்டக்குழு!

ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட விளையாட்டு கலைக்குழுவினர், புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ளுக்கு, வீடுவீடாகச் சென்று சேனிடரி நாப்கின்களை வழங்கினர்.

Update: 2021-06-06 07:35 GMT

தமிழகத்தில் கொரானா 2ம் அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. நாளை முதல்,  சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என முதல்வர் அறிவித்துள்ளார். இருப்பினும் ஈரோடு உட்பட 11 மாவட்டங்களுக்கு,  முழு ஊரடங்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நகர் பகுதியைக் காட்டிலும் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில், மக்கள் வாழ்வாதாரம் பாதித்து,  பொருளாதாரத்தில் சிரமப்பட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கின்ற்னார். இந்நிலையில் ஈரோட்டைச் சேர்ந்த வஜ்ரம் சிலம்பாட்ட கலைக்குழுவைச் சேர்ந்த பெண்கள், சேனிடரி நாப்கின்களை கிராமப்புற பெண்களுக்கு, அவர்களது வீடுகளுக்கு நேரில் வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து, வஜ்ரம் குழுவினர் கூறுகையில், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள்,  பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளித்து வருகின்றனர். எங்கள் குழு சார்பில் வளரிளம் பெண்களின் சுகாதாரத்திற்கு மிக முக்கியமானதாக கருதப்படும் சானிட்டரி நாப்கின் வழங்குவது என்று முடிவு செய்தோம்.

மேலும் நகர்ப்புற பகுதிகளில் வாழ்பவர்களை காட்டிலும், கிராமப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் சிரமங்களை குறைக்கும் வகையிலும், அங்கு இதனை வழங்குவது என முடிவு செய்தோம். நாங்கள் அனைவரும் பெண்களாக இருப்பதால் வீடு வீடாகச் சென்று பெண்கள் உள்ளனரா என்று அறிந்து வழங்குவதில் எவ்வித சிரமமும் இல்லை என்றனர். வஜ்ரம் சிலம்பாட்ட கலைக்குழுவினரின் இந்த சேவையை, பெண்களும் சமூக ஆர்வலர்களும் பாராடியுள்ளனர். 

Tags:    

Similar News