பவானி கூடுதுறைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்
பவானி கூடுதுறை கோவிலுக்கு சுவாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நடை சாத்தப்பட்டிருப்பதை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களும் அரசு விதிப்படி குறிப்பிட்ட நாட்களில் அடைக்கவும், குறிப்பிட நாட்களில் திறந்து விட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கவும் உத்திரவிடப்பட்டிருந்தது. இதன்படி பவானி கூடுதுறை கோவில் என அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் கோவில் அடைக்கப்பட்டதால், ஆடி வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய பல ஊர்களிலிருந்து வந்த பக்தர்கள் கோபுர வாயிலில் வணங்கி விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறியதாவது: ஆக.13,14,15 ஆகிய நாட்களில் கோவில்களை அடைக்கவும், ஆக. 16 முதல் 19 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோவிலை திறந்து விடவும், மீண்டும் ஆக. 20,21,22 ஆகிய நாட்கள் அடைக்கவும் தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளதது என்று கூறினர்