கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - ஈரோடு கலெக்டர் கள ஆய்வு

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, ஈரோடு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-31 14:28 GMT

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டியாக ஈரோட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் ஈரோடு நகரப்பகுதியில் வேகமாக பரவி வந்த தொற்று, தற்போது கிராமப்புற பகுதிகளிலும், குடும்பம் குடும்பமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கிராமங்களில், ஊராட்சி செயலாளர்கள் ,சுகாதாரத்துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. நூறு வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டு, வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வகையில், இன்று பவானி ஊராட்சி ஒன்றியம், ஓடத்துறை, பி.மேட்டுப்பாளையம் மற்றும் ஆப்பக்கூடல் பேரூராட்சி ஆகிய பகுதிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் ஆய்வு மேற்கொண்டார். அலுவலர்கள், மருத்துவப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் வீடுகளுக்கு சென்று,  நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்குமாறு , அவர் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News