பவானி: தடுப்பூசி மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையங்களில் கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-06-19 09:31 GMT

ஈரோடு மாவட்டத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று மாவட்டம் முழுவதும் 67 இடங்களில், 13ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது தடுப்பூசி போடுவதில் பொதுமக்களும்கு ஆர்வம் அதிகித்துள்ளதால் அதிகாலை முதலே மையங்களில் தடுப்பூசி போடுவதற்காக மக்கள் குவியத் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக பாவனியில் 6 இடங்களில் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி பணிகள் குறித்தும், டோக்கன் வழங்குவது மற்றும் மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பவானியில் 6 தடுப்பூசி மையங்களிலும் சேர்த்து இன்றைய தினம் மொத்தம் 1000 கோவிசீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. 

Tags:    

Similar News