ஈரோடு மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம்: 84 ஆயிரம் பேர் பயன்

ஈரோடு மாவட்டத்தில் மெகா கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 84,402 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-09-27 02:00 GMT

தமிழகம் முழுவதும் கடந்த 12ஆம் தேதி முதல் முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 19ம் தேதி இரண்டாவது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அடுட்து, மூன்றாவது முறையாக தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம், நேற்று நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் முதற் கட்ட தடுப்பூசி முகாம் 847 மையங்களில் 97 ஆயிரத்து 198 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.இரண்டாவது கட்டமாக நடந்த தடுப்பூசி முகாம் 538 மையங்களில் 48 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டது.  நேற்று நடந்த 3-வது கட்ட தடுப்பூசி முகாமில், ஈரோடு மாவட்டத்தில் 579 மையங்களில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் 2300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். 86 வாகனங்கள் முகாமுக்கு பயன்படுத்தப்பட்டன. இந்த முறை தடுப்பூசி போடும் பணியில் கல்லூரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்றனர்.மெகா தடுப்பூசி முகாம் மூலம் நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்தில் 84 ஆயிரத்து 402 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News