ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.3.45 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-12 07:15 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அருகே மோட்டார்பைக்கில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 3.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓடத்துறை கிராமம் வெட்டுகிராய் என்ற இடத்தில் இன்று தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கோபியில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி மோட்டார்பைக்கில் வந்து கொண்டிருந்த சுவாமிநாதன் என்பவரிடம் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.3 லட்சத்து 45 ஆயிரத்து 400 ரூபாய் ரொக்கபணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பணத்தை கருவூலத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News