பவானி: பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது

பவானி அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் ஒன் மாணவ, மாணவியர்கள் 543 பேருக்கு விலையில்லா சைக்கிளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் வழங்கினார்.

Update: 2021-01-20 10:52 GMT

ஈரோடு மாவட்டம் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தாண்டு பிளஸ்-1 பயின்று வரும் 543 மாணவ மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பவானி மாவட்ட கல்வி அலுவலர் பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு மாணவ, மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மோகனா, மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News