ஈரோடு மாவட்டத்தில் தொடங்கிய மஞ்சள் அறுவடை..! இருப்பு வைக்கவும்,விற்கவும் யோசனை!

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தொடங்கியதால் இருப்பு வைக்கவும், நேரடியாக விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-01-13 04:09 GMT

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தொடங்கியதால் இருப்பு வைக்கவும், நேரடியாக விற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மஞ்சள் அறுவடை தொடங்கியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அறுவடை தொடங்கியுள்ளதால் விளை பொருட்களை தனியார் கிடங்குகளில் இருப்பு வைக்கும் போது, ஈரோடு விற்பனை குழு உரிமம் பெற்றுள்ளது உறுதி செய்ய வேண்டும்.

இருப்பு வைக்கும் போது கவனிக்க வேண்டியவை

  • பொருளின் பெயர், அளவு, எடை, விவசாயி பெயர், முகவரி அடங்கிய சேமிப்பு கிடங்கின் ரசீதுகளை, கிடங்கு உரிமையாளரிடம் இருந்து பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  • அவ்வப்போது கிடங்குக்கு வந்து, விளை பொருட்கள் பாதுகாப்பாக முறையாக பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கிடங்கில் தீ, திருட்டு போன்றவற்றுக்கு காப்பீடு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

பண்ணை வழி வர்த்தக முறை

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில், பண்ணை வழி வர்த்தக முறை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விளை பொருட்களை, விளை நிலத்திலேயே இடைத்தரகர் இன்றி நேரடியாக வணிகர்களிடம் விற்கலாம்.

தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தில் விற்பனை விவரம்

விவரம் 

மதிப்பு - 7.91 கோடி ரூபாய்

விற்பனை அளவு  - 2,028 டன்

விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் - தக்காளி, கோஸ், தேங்காய், கொப்பரை தேங்காய், வாழைத்தார், மஞ்சள், எள், நிலக்கடலை

Tags:    

Similar News