கோபியில் இயக்குனர் வெற்றி மாறனுக்கு தமிழர் உரிமை கழகம் சார்பில் பாராட்டு விழா!

விடுதலை 1 மற்றும் 2 திரைப்படங்களின் இயக்குனர் வெற்றி மாறனுக்கு தமிழர் உரிமை கழகம் சார்பில் கோபியில் பாராட்டு விழா நடைபெற்றது.;

Update: 2025-01-18 09:17 GMT

விடுதலை 1 மற்றும் 2 திரைப்படங்களின் இயக்குனர் வெற்றி மாறனுக்கு தமிழர் உரிமை கழகம் சார்பில் கோபியில் பாராட்டு விழா நடைபெற்றது. பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது ஆடுகளம் திரைப்படம் 2011ம் ஆண்டு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுடன் 6 விருதுகளை பெற்றது.

போராளியின் வாழ்க்கையை சித்தரித்த படம்

இவரது விடுதலை 1 மற்றும் விடுதலை 2 திரைப்படங்களில், மக்களுக்காக தனிப்படை அமைத்து போராடும் போராளி ஒருவரின் கதை பலரது பாராட்டுகளை பெற்ற நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெற்றி மாறனுக்கு தமிழர் உரிமை கழகம் சார்பில் பாராட்டு விழா கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது.


பல்வேறு தரப்பினர் பங்கேற்பு

மூத்த வழக்கறிஞர் மோகன், மே 17 இயக்க திருமுருகன் காந்தி, தற்சார்பு விவசாய சங்க நிர்வாகி கி.வெ. பொன்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டினர். அதைத்தொடர்ந்து திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News