ஈரோடில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.;

Update: 2021-11-03 16:30 GMT

பைல் படம்.

ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மொத்தம் 5 மீன்வள உதவியாளர் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் "மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஈரோடு - 638011 (தொலை பேசி எண் 0424- 2221912 ) என்ற முகவரியில் அலுவலக வேலை நேரங்களில் நேரிலோ அல்லது adferode1@gmail.com என்ற மின்னஞ்சலில் கோரிக்கை செய்யும் பட்சத்தில் மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், வயது நிரூபண சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல், இருப்பிட சான்றிதழ் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42 சுப்புராம் காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், ஈரோடு -638011 என்ற முகவரிக்கு 26.11.2021 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்க தக்க வகையில், விண்ணப்ப உறையின் மேல் "ஈரோடு மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல்" எழுதி அனுப்பிட வேண்டும் என ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News