ஊரக வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஈரோட்டில், ஊரக வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.;
ஊரக வளர்ச்சி துணை இயக்குநர் அலுவலகம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மூன்றாவது தளத்தில் ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, திட்டங்கள் நிறைவேற்ற பல லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைமாற்றப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில், ஆய்வாளர் ரேகா உட்பட 10 போலீசார், இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.