ஈரோட்டில் போக்குவரத்தில் மாற்றம்
ஈரோடு மாநகரில், கம்பம் ஊர்வலத்தால் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என அறிவிப்பு;
இன்று ஈரோட்டில் போக்குவரத்தில் மாற்றம்: கம்பம் ஊர்வலத்தால் வழித்தடங்களில் மாற்றம்
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களில் இன்று நடைபெறும் கம்பம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு, மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஈரோடு மாநகரில் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் வழியாக வருகிற பஸ்களுக்கு மாற்று வழி
இந்த பஸ்கள் பள்ளிபாளையம் வழியாக வந்து, காவிரி ரோடு – கே.என்.கே. சாலை – மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி சென்று, வ.உ.சி. பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு திரும்பவும் காவிரி சாலை வழியாக செல்ல வேண்டும்.
கோபி, சத்தி வழியாக வருகிற வாகனங்களுக்கு மாற்றம்
இந்த வழி பஸ்கள் பாரதி தியேட்டர் சந்திப்பில் பயணிகளை இறக்கி, வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப்பிலிருந்து மீண்டும் கோபி/சத்தி சாலையில் செல்ல வேண்டும்.
பவானி மற்றும் அந்தியூர் பகுதியிலிருந்து வருகிற பஸ்கள்:
வ.உ.சி. பூங்கா பின்புறம், அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, அதே வழியாக பின்வந்து பவானி, அந்தியூர் பகுதிகளுக்கு திரும்ப வேண்டும்.
பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு முன்கூட்டியே பயணத்திட்டத்தை அமைத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுள்ளனர்.