அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோட்டில், கடந்த 25ம் தேதி, அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது;

Update: 2025-03-28 03:40 GMT

ஈரோடு அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோடு, கொல்லம்பாளையம் ரயில்வே எலக்ட்ரிக் லோகோ ஷெட் அருகே கடந்த 25ம் தேதி மதியம், அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்தவர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர். அவருக்கு மெரூன் கலர் டி-சர்ட் மற்றும் சிமெண்ட் கலர் வேஷ்டி அணிந்திருந்தார். மேலும், அவரது வலது கையில் "P.R.S", இடது கையில் "B+D" என பச்சை குத்தப்பட்டிருந்தது. சம்பவத்தை அடுத்து, சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு, சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதேபோல், கொடுமுடியை அடுத்த சத்திரப்பட்டி திட்டுக்காடு பகுதியிலுள்ள சுரேஷின் வாழைத்தோட்டத்துக்கு கிழக்கே, காவிரி ஆற்றங்கரையில் இன்னொரு ஆண் சடலம் மிதந்த நிலையில் கிடந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆணின் அடையாளம் குறித்து மலையம்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News