விவசாயிகளுக்கு இலவச பயண வாய்ப்பு
கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தல், விவசாயிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது;
விவசாயிகளுக்கு ஆராய்ச்சி நிலைய சுற்றுலா – புதிய கரும்பு ரகங்கள் குறித்து விழிப்புணர்வு
சென்னிமலை: சென்னிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் அறிவிப்பை தெரிவித்துள்ளார். வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், மார்ச் 27 மற்றும் 28 (இன்று மற்றும் நாளை) கோவையில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்திற்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கரும்பு விவசாயத்தில் புதிய ரகங்கள் மற்றும் மேம்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் நேரில் சென்று அறியலாம்.
இதற்காக, 50 விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். சுற்றுலாவில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது வட்டார தொழில்நுட்ப மேலாளரை அணுகி முன்பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, வேளாண்மை அலுவலரை 80563-83287 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.