ஈரோட்டில் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து

ஈரோட்டில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.;

Update: 2021-12-04 07:30 GMT

சேதமடைந்த வீடு.

ஈரோடு சூளை பகுதியில் உள்ள பாரதி நகரில் வசித்து வருபவர்கள் அந்தோணியம்மாள் ( 60 ) மற்றும் வசந்தா (61 ). இவர்கள் இருவரும்  தனது ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை முதலே பெய்து வரும் கனமழையின் காரணமாக, இவர்களது வீட்டின் சுவர் இடிந்து, வெளிப்புறமாக விழுந்தது. வீட்டின் சுவர் வெளிப்புறமாக விழுந்ததால், வீட்டில் தனியாக இருந்த அந்தோணியம்மாள் வசந்தா ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இருந்தபோதிலும் வீட்டின் உட்புறமும், வெளிப்புறமும் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News