ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்து திருட முயன்ற வாலிபர்..மடக்கி பிடித்த ஊழியர்கள் !

ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள காப்பர் வயர்களை திருட முயன்ற வாலிபரை ஊழியர்கள் மடக்கி பிடித்தனர்.;

Update: 2025-01-08 05:00 GMT

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறைகள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அறைகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பிரிவு, வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அதிகாலை திருட்டு முயற்சி

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர் ஒருவர் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைந்து அங்குள்ள காப்பர் வயர்களை திருட முயன்றுள்ளார்.

சிசிடிவி கேமராவை உடைக்க முயற்சி

அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை உடைக்க முயன்றுள்ளார். ஆனால் உடைக்க முடியவில்லை.

ஊழியர்களின் நடவடிக்கை

இந்நிலையில் காலை ஊழியர்கள் உள்ளே வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஊழியர்களை பார்த்ததும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். ஆனால் ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.

Tags:    

Similar News