சாலையோர பள்ளத்தில் பாய்ந்த டவுன் பஸ் பயணிகள் காயம்!
சாலையோர பள்ளத்தில் பாய்ந்த டவுன் பஸ் காயமடைந்த பயணிகள்;
பவானிசாகர் - சத்தியமங்கலம் அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியது மூன்று பயணிகளுக்கு லேசான காயம்
பவானிசாகரில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சத்தியமங்கலம் நோக்கி கெஞ்சனூர் வழியாக 1-ம் நெம்பர் அரசு டவுன் பஸ் நேற்று மாலை புறப்பட்டது. ஓட்டுநர் பிரகாஷ் (34) பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தார்.
சத்தியமங்கலம் சாலையின் தயிர் பள்ளம் பகுதியில் நேற்று மாலை வீசிய காற்றால் மரம் முறிந்து விழுந்ததால், பேருந்து மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வெள்ளியம்பாளையம் கொக்கரக்குண்டி சாலையில் ஜெ.ஜெ.நகர் அருகே செல்லும்போது மழை பெய்து கொண்டிருந்தது.
இந்நிலையில், ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்புறத்தில் அமர்ந்திருந்த மூன்று பயணிகள் லேசான காயம் அடைந்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் இருந்து பேருந்து மீட்கப்பட்டது.