உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு அதே நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது;
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடைபெறும் தீமிதி திருவிழா இவ்வாண்டு ஏப்ரல் 8ம் தேதி (திங்கள்) நடைபெறுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அதே நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறையின் ஈடாக, ஏப்ரல் 26ம் தேதி (வெள்ளிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.