ஈரோடு : விவசாய நிலங்களில் சுற்றித்திரியும் யானை கூட்டத்தால் கிராம மக்கள் பீதி..!
கடம்பூரில் கூட்டமாக விவசாய விளைநிலங்களுக்குள் சுற்றித் திரியும் யானைகள்.;
ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனர் சரகங்கள் உள்ளன, கடம்பூர் வனச் சரகுக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
யானைகளின் வழக்கமான நடவடிக்கைகள்
யானைகள் குடிநீர் மற்றும் உணவுக்காக வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம்.
நேற்றைய சம்பவம்
நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 7க்கும் மேற்பட்ட யானை கூட்டம் கிராமப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்தன. மேலும், யானைகள் பயிர்களை இன்றும் மிதித்தும் அட்டகாசம் செய்தன.
பொதுமக்கள் எடுத்த நடவடிக்கை
யானைகள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
விவசாயிகள், கிராம மக்கள் யானைகள் நடமாடும் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டிச் செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.