சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 போ் கைது !.. 5 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.;

Update: 2025-02-21 10:50 GMT

ஈரோடு : சித்தோடு அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சித்தோட்டை அடுத்த கன்னிமாா்காடு தேவனாங்காட்டில் சட்டவிரோதமாக மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் சித்தோடு போலீஸாா் புதன்கிழமை மாலை சோதனை நடத்தினா்.

அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் அள்ளப்பட்டு லாரியில் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 டிப்பா் லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், பவானி அருகே உள்ள மேட்டுநாசுவம்பாளையத்தைச் சோ்ந்த கோபால்ராஜுக்கு (50) சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவது தெரியவந்தது.

இதுதொடா்பாக, கோபால்ராஜ், சித்தோடு ஆா்.என்.புதூரைச் சோ்ந்த ரமேஷ் (26), விக்னேஷ் (30), சங்ககிரியைச் சோ்ந்த கண்ணன் (50), எடப்பாடியைச் சோ்ந்த சக்திவேல் (23), ராஜா (34), பா்கூரைச் சோ்ந்த சித்தலிங்கம் (30), எலவமலையைச் சோ்ந்த பாலாஜி (28) ஆகிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், அனைவரும் ஈரோடு குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

மேலும், மண் கடத்தலுடன் தொடா்புடைய எலவமலை சென்னாநாயக்கனூரைச் சோ்ந்த தேவராஜ் (51), பிரபு (36) ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News