ஈரோட்டில் ஏப்.16ம் தேதி 514 பறிமுதல் வாகனங்கள் ஏலம்

ஈரோட்டில் ஏப்.16ம் தேதி காவல் துறையில் பறிமுதல் செய்யப்பட்ட 514 வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன.;

Update: 2022-04-16 04:36 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட யாரும் உரிமை கோராமல் 419 டூவீலர்கள், மூன்று நான்கு சக்கர வாகனங்கள் உள்ளன. இவைகள் ஏப். 16ல், காலை 10:00 மணிக்கு, 46, புதூர் ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்படுகிறது.

இது தவிர ஈரோடு மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட 68 டூவீலர், 10 நான்கு சக்கர வாகனங்கள், மது விலக்கு குற்ற வழக்கில் சிக்கிய 6 நான்கு சக்கர வாகனங்கள், 8 இரு சக்கர வாகனங்களுக்கும் பொது ஏலம் நடக்கவுள்ளது.

மொத்தம் 495 டூவீலர்கள், 19 நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது. முன் தொகை செலுத்துவோர் மட்டும் ஏலத்தில் பங்கேற்க முடியும்.

Tags:    

Similar News