குமாரபாளையத்தில் 2 பள்ளி மாணவர்கள் மாயம்
9ம் வகுப்பு பயின்று வரும் 2 மாணவிகள் திடீர் மாயம், கண்ணீரில் பெற்றோர்;
குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்த சுசி (15) மற்றும் பிரியா (14) என்ற இரு சிறுமிகள், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில், வீட்டில் இருந்து வெளியே சென்று விரைவில் திரும்புவதாக கூறி சென்ற அவர்கள், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் கவலையில் ஆழ்ந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், உடனடியாக குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீசார் இருவரையும் தேடும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன மாணவியர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.