கொடுமுடி ஆற்றில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீர் எடுக்க வந்த போது, குளிக்க தடை செய்யப்பட்ட பகுதி என தெரியாமல் ராஜ்குமார் (30), பிளஸ் டூ படிக்கும் கேசவனிதன்(17) ஆகிய இரண்டு பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Update: 2020-12-20 16:57 GMT

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே காமாட்சிபுரம் கிராமத்தில் உள்ள கோயில் திருவிழாவிற்கு ஆண்டு தோறும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடீஸ்வரர் வீரா நாராயண பெருமாள் கோயில் முன்பு உள்ள காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்து சென்று திருவிழா நடத்துவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா நடத்த புனித நீர் எடுக்க காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 10 பேர் ஞாயிற்று கிழமை காலை கொடுமுடி வந்தனர். பின்னர் கொடுமுடி கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணல்மேடு பகுதியில் அனைவரும் குளிக்க சென்றனர். இந்த பகுதி குளிக்க தடை செய்யப்பட்ட பகுதி என தெரியாமல் குளிக்கும் போது ராஜ்குமார் (30), பிளஸ் டூ படிக்கும் கேசவனிதன்(17) ஆகிய இரண்டு பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கொடுமுடி தீயணைப்பு துறை, காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News