பிரபல கட்டுமான நிறுவனத்தில் திடீர் வருமானவரி சோதனை : பல கோடி ரூபாய் பறிமுதல் !
ஈரோட்டில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக பேருந்து, திருமணமண்டபம், மசாலா தயாரிப்பு என பல்வேறு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் பெற்று செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் நேற்று ஈரோடு, கோவை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு சொந்தான அலுவலகங்கள், பங்குதாரர்களின் வீடுகள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையானது 3வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் இதுவரை சுமார் 16 கோடி ரூபாய் ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறத. இந்த சோதனை மேலும் நீடிக்கும் என்று எதி்பார்க்கப்படுகிறது.