பர்கூர் காட்டில் நடந்த கொடூரக் கொலை
கொலையாளியை, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்;
அந்தியூர்: பர்கூர் காட்டில் நடந்த கொடூரக் கொலை வழக்கில் கைதான இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுக்கா சின்னக்குத்தியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25) கடந்த மார்ச் 31-ஆம் தேதி பர்கூர் மலை அருகிலுள்ள தட்டகரை வனப்பகுதியில் உள்ள போதமலை எம்மம்பட்டி பள்ளத்தில் எரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தலை மட்டும் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், சக்திவேலுக்கு தனது மனைவியின் அண்ணன் வெங்கடேஷின் இரண்டாவது மனைவியுடன் கள்ளக்காதல் இருந்தது தெரிய வந்தது. இந்த உறவை கண்டித்த வெங்கடேஷ், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரனுடன் சேர்ந்து, சக்திவேலை மரம் வெட்டுமாறு அழைத்து சென்று, திட்டமிட்டு கொலை செய்து பிறகு உடலை எரித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் அந்தியூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின் இருவரும் அந்தியூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாலையில் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிறகு ஈரோடு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.