திண்டுக்கல் அருகே போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை
வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வழக்கு நடந்தது;
போக்சோ வழக்கில், இருவருக்கு சிறை: நீதிமன்றம்.
திண்டுக்கல் அருகே,வடமதுரையில் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவன், மனைவி 2 பேருக்கு சிறை தண்டனை திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ராஜேஷ்குமார்(32), மனைவி கிருத்திகா(22) ஆகிய 2 பேரை வடமதுரை போலீசார் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் ,
டிஎஸ்பி.துர்காதேவி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் முயற்சியால் ,ராஜேஷ் குமாருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும், கிருத்திகாவிற்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.8000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
குடிநீர் கேட்டு சாலை மறியல்.
திண்டுக்கல் அருகே,சித்தையன் கோட்டையில், குடிதண்ணீர் கேட்டு, காலி குடங்களுடன் சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.இப் பகுதி மக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி, பேரூராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று பலமுறை கூறியும், நடவடிக்கை இல்லையாம். மேலும், நிர்வாக அதிகாரியை பேரூராட்சி அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை என்றும் குற்றச்சாட்டி, சித்தையன் கோட்டையில், காலிக் குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.